பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 113 அம்பிகை-கண்களை அச்சத்தால் மூடினாள்; அவன் முகம் காணாமலேஅவனோடு-அழகிய அமளியில் கூடினாள்! பள்ளி நீங்கிய-ஞானப் பள்ளியிடம். 'அன்பு மகனே! அம்பிகையின் வயிற்றில்அருங்குணத்தவனாய்-ஓர் ஆண்மகன் அவதரிப்பானா? அரசு முடியை அவன் தரிப்பானா? என்றுவினவினாள் சத்தியவதி; விளக்கினான் சதுர்வேதி! 'அம்மா! - அம்பிகை மகன்-பத்தாயிரம் தும்பிகள் பலம் கொண்டுபிறப்பான், ஒரு நூறுபிள்ளைகளைப் பெற்றெடுத்துச் சிறப்பான்; ஆயினும். பெற்றவள் பிழையால்-பார்வையைத் துறப்பான்!” வியாசன்விளம்பியது கேட்டு. அந்தகன் முடிபுனைந்துஅரசோச்ச முடியாதே! என்றுஎண்ணிக் குமைந்தாள்சத்தியவதி; (1-பக்:66-67)