பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சாதியில் அவனொருவேதிய னாயினும்சத்திரியன் போல்சமர்க்குணம் பூண்டவன்; பார்ப்பில் பிறந்த பரகராமனை வார்ப்பில் மீண்டும்வடித்தது போன்றவன்! (I-பக்:189) இவனும் இவன் சோதரியும் நாணல் தண்டில் உதித்தவர்கள். கெளதமரின் மகன் சரத்வானின் தவத்தைக் கெடுக்க ஜாலவதி என்னும் அப்சர மாதை அனுப்பினான். சரத்வான் சித்தம் தளர்ந்து சஞ்சலப்படுகையில் அவ னிடமிருந்து வெளிப்போந்த வீரியம் வெளிப் போந்து தீர்த்தங்கரை நாணல் தக்ஷன்மீது விழுந்து இருபெரும் பிரிவுகளாகி ஒர் ஆண்மகவாகவும் பெண்மகவாகவும் மாறியது. அழுதுகொண்டு கிடந்த இரு குழவிகளையும் வேட்டை நிமித்தம் அவண் போந்த சந்தனு எடுத்து வளர்த்தான்-கிருபன் கிருபி எனப் பெயரிட்டு. காளைப் பருவம் எய்திய கிருபனுக்கு கெளதமர் வில் மல் முதலான வித்தைகளில் பயிற்சி அளித்தார். இருவரையும் பீஷ்மன் பேணிக் காத்தான். 25. துரோணன் துரோணனைப் பற்றிய அறிமுகம் இது: கங்கைக் கரையில் கொலுவிருந்து-அந்தக் குடில்! அந்தக் குடில்-தோற்றத்தில் குறில், ஏற்றத்தில் நெடில்!