பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 179 குணாளன்-எவர்க்கும் மணாளன் ஆகாதவன்; பலர்மணம் புரிய தூது போயும் தான் மன்மதனால் வேகாதவன்! (I-பக்:14-15) அற்புதமான அறிமுகம். நாரதனை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுவது. நெட்டெழுத்து-எட்டெழுத்து, கலகப் பிரியன்-உலகப் பிரியன், வேகமாய்-காகமாய், சர்ப்பத்தில்-கர்ப்பத்தில், மகதியாழ்-அகதியாழ், ஆறுமுகம்-ஆறுமுகம்-அறிமுகம்- (கோள்) கூறுமுகம் என்ற சொல்லிணைகள் வீசும் ஒளிக்கதிர்கள் நம் உள்ளொளியை மேலும் பிரகாசிக்கச் செய்கின்றன! 39. சித்திராங்கதை பாண்டியன் மகளை அறிமுகம் செய்வது இதோ! பூங்காவில்பூப்பறித்த - வெறும் பூவல்ல; பாண்டியவேந்தன் பெற்றெடுத்தநறும்பூ! அரும்பு என்றிருந்து-அது அலர்ந்த பின்பும்-ஒரு கரும்பு தொடவொண்ணாதசுத்தப் பூ சுந்தரப் பூ! ! فارابي அந்தஊதாப்பூ-வண்டு ஊதாப்பூ அந்துமகிழம்பூ-தனித்து மகிழும்பூ!