பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு "கீசகன்! என்னும்-அக் கீழ்மகன்-இருகால் விலங்கென ஊர்சொலவாழ்மகன்; தான்எனும் வெறியினில் நெறிகெடவீழ்மகன்; நாணின்றிஅருவருப்பான செயல்களில்ஆழ்மகன்! அக்காள் புருஷன்அறுபதைத் தாண்டி முக்கால் கிழமாய்முற்றிவிட்டதால்... முற்றிய புள்ளிக்கு-ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்மைத்துனன் கீசகன்; மாய்மால வாசகன்! அவன் தானைத் தலைவன் எனினும் "தானே தலைவன்-என சேனைக்கும்-ஊர் - குேம் தெரியச் செய்தான்; புரியச் செய்தான்; மன்னன்செல்வாக்கை-மெல்ல மெல்ல சரியச் செய்தான்! (I-பக்.255) வாசகர்கட்கு இது போதும். சைரந்தரியான பாஞ்சாலி மீது மோகம் கொண்டான். வல்லபன் என்ற வீமனால் மடிந்தான்.