பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 201 கைத்தலம் பற்றி-உன் புத்திரி உத்தரை-தன் புகுந்த வீடு போகட்டும்! (I-பக். 290) என்கின்றான். இவனைப்பற்றி அறிமுகம் செய்யும் போக்கில் கவிஞர் வாலி, அர்ச்சுனன் பிள்ளைஅபிமன்யு. வாளிப்புக்கு-ஒரு : வியாக்கியானம்; எந்தவில்லிக்கு மில்லை-அவனை விஞ்சிய ஞானம்; பற்பலவித்தகர் தந்தது-அவனது வித்தியாதானம்; இந்தவயதிலேயே-அவன் புகழ் விரிந்த வானம்! ஒரு போதும் வைத்த குறி. அகலாது அவன் வாளி; அவன்அத்துணை அறிவாளி; அவன்வெஞ்சமர்க் கேணியில்-வெற்றி வெள்ளத்தை அள்ளும் வாளி ! (I-பக். 290,292) இந்த அறிமுகம் பாரதப் பெரும்போரில் அவன் ஆற்றிய பெரும்பங்கை விளக்கப் போதுமானது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதை மெய்ப்பிப்பது! 50. பார்த்தசாரதி இவனுக்கு அறிமுகமா வேண்டும்? உபசாரமாக ஈண்டுச் செய்யப் பெறுகின்றது! கவிஞர் வாலி வாக்காக, இங்ங்ணம் அறிமுகம் ஆகின்றார்.