பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கண்ணன் என்னும்கருங் கடவுளை: ஆரணங்களுக்குஅகப்படாது-ஆயர்பாடி ஆரணங்களுக்குஅகப்பட்ட அருங்கடவுளை: தயிர் கடையும் இடைச்சியர்உயிர் கடையும் இருடிகேசனை; இருக்கு முதலாக இருக்கும் ஈரிரு மறைகளோதி உருக்கு மனத்தையும் உருக்கும் இருடிகள் நேசனை, கரையும் பேர்க்கு-கைகொடுக்க விரையும் விரதனை; இரை இருந்தும்-ஆ நிரை. வரையில் மேயாது-ஒரு வரையில் மயங்கி நிற்க-வாய் வரையில் இசைக் கோலம் அந்தி வரையில் வரையும் வரதனை; மாலை நிறங்கொண்ட மாலை; வனசம் என்று வண்டுகள் வந்து மொய்க்கும் காலை மண்ணிலவன் வைக்கும் காலை. (I-பக். 290-91) இந்த அறிமுகம் கண்ணன் பாண்டவர் கரந்துறை ೧೯unfd நிறைவு பெற்று விராடநகரில் நடைபெறும் அபிமன்யு-உத்தரை திருமணத்திற்கு வரும்போது நடைபெறுகின்றது. பிறிதோர் இடத்தில்,