பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நீயே மூச்சு, நியில்லையேல் நின்றுபோகும் மூச்சின் நீச்சு! எளியேன்-நின்கரம் ஏந்திடும் ரிசங்கு நீ யெனை ஏந்தாவிடில்-_ என் வாழ்வு திரிசங்கு! தமியேன்-நின்கரம் தாங்கிடும் சுதர்சனம், நீ யெனை தாங்காவிடில்-நான் கரைசேர்தல் நிதர்சனம்! நாயகனே! இருஅல்ல-எனும்படி இரு இருப்பின்-நான் செயிக்கக்கூடும்-நூறு செரு சீதரா! நீயல்லால் ஏது நான் தழைக்க-வேறு எரு? என்றும் நீ-நான் கும்பிடும் தாய்; தந்தை; குரு (I-பக். 303) பிறிதோர் இடத்தில் குறிப்பிடுவது அற்புதம்: இங்ங்னம் வாலியார் கண்ணனைப் பல இடங்களில் குறிப்பிடும்போது தம்மை மறந்து கண்ணனைப் போற்றுவர். அப்போதெல்லாம் அரங்க நகரில் பிறந்த வாலியாரின் அரங்கநகர் அப்பன் நினைவு அவர்தம் வாக்கில் வெளிப்படுவதைக் கண்டு மகிழலாம். உயிர் வரிசையிலும் நில்லாது மெய் வரிசையிலும் நில்லாது தனித்து நிற்கும் தமிழெழுத்து ஆயுதம்: