பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அப்படியே ஆகட்டும்! என்று இறுகிய மனத்தோடு. வழங்கினான் சல்லியன் வாக்குத்தத்தம் துரியனுக்கு-நன்கு தெரியும். வாக்குத் தத்தம் செய்தவனின் வாக்குச் சுத்தம்! (I-பக். 308) இவன் அறிமுகம் போதும்-கதைத் தொடர்பைப் பார்த்துத் தெளிந்து கொள்வதற்கு. 52. விசுவருபன்: இவன் வரலாற்றைச் சல்லியன் பாண்டவர்க்குக் கூறுகின்றான் சல்லியன். எதற்கு? செய்வினைசென்மக்கடன்; காலாவதியாகும்கட்டிய உடன் ! (TI-Lé:312) என்ற பேருண்மையை உணர்த்துவதற்கு ஆணவத்தில் இந்திரன் தன் குலகுரு பிரகஸ்பதியிடம் மரியாதைக் குறைவாய் நடந்துகொள்ள அவர் தலைமறைவானார். ஆணவம் அடங்கிய அமரேசன் ஆசாரியரைத் தேடியும், அரசகுரு- - அமரேசனின்கண்ணுக்கு அகப்படாமல்கண்ணாமூச்சி ஆடினான்! (I-பக்313) நான்முகன் யோசனைப்படி 'விசு வருபனைப் பிரகஸ்பதியாகக் கொண்டனர்: