பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிராமணனே! உன் - பச்சாதாபம் பொருளற்றது; இறைச்சி விற்பவனும்-என் இதய இல்லம் - இருளற்றது; ஓர் - அந்தணனாயினும்-நீ அடைந்த அறிவு - அருளற்றது. அனைத்தும் - தெய்வசித்தம்-எனத் தேராததால்-அது தெருளற்றது! பிறப்பால் நானொரு - புளிஞன்; எனினும் - தெய்வானுக் கிரகத்தால்-நான் தெளிஞன். (1-220) என்று தொடங்கி விளக்கும் கருத்துக்கள் யாவும் உபநிடதக் கருத்துகளையும் விஞ்சுமாறு அமைந்துள்ளது. கதையில் புளிஞனன்-அந்தணன் உரையாடல் அமைத்தது வாலியாரின் புரட்சிகரமான நோக்கு. யுயுச்சு என்ற காவிமாந்தனின் படைப்பும் அற்புதம். வில்லியில் காணப்படாதது. பல கிளைக்கதைகள் பொருத்தமாக அமைந்திருப்பது காவியத்தின் சுவையை மிகுவிப்பதாக உள்ளது. அவற்றைப் படித்து இடம் நோக்கிச் சிந்தித்தால் உண்மை தெளிவாகும். சிலப்பதிகாரம் சிந்தாமணி காவியங்கள் எழுந்தபிறகு அவற்றையெல்லாம் படித்தபின் தண்டியார் பெருங்காப்பிய இலக்கணம் வரைந்தார். பிற்காலத்தில் காவியம் படைப்பார்க்கு அஃது ஒரு வழிகாட்டியாக இருந்தது எனினும் அதன் நேர்வழி நின்று எவரும் காவியம் படைத்தாகத் தெரியவில்லை. - புதுக்கவிஞர்கள் அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவதார புருஷனைப் படைத்தபோதும் பாண்டவர் பூமியைப்