பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 249 சத்தியவதியின் சித்திரவதனம்ஒருபுறம்; இங்ங்ணம்இழுபறி நிலையில்-சந்தனு இளைத்துப் போனான்; இருபுறம் அடிவாங்கும் மிருதங்கம் ஆனான்! (1-பக். 34) (ii) சந்தனு காமக்கடலில் திளைத்தது பற்றியது: வானவப் பெண்-முன்னம் வாரி சுருட்டிய மெத்தையைமீனவப் பெண்-துரசுதட்டி மீட்டும் விரித்தாள்; பிறகு-தன்மேல் பிச்சாய் இருக்கும் புருஷனையே-மார்புக் கச்சாய் தரித்தாள்! காவலன்குடம்குடமாய்க் குடித்தான்காய்ச்சிய பாலை; பின்கும்மிருட்டில் படித்தான் காமத்துப் பாலை! அரசன் நினைவில்அந்நியமானதுஅத்தினபுரம்; அதிக அந்நியோந் நியமானதுஅந்தப்புரம்! (1-பக். 35-36) (2) காட்சியில்லாத காவலன் கணிகனிடம் கூறும் போக்கில் வாலியாரின் வாக்கு: பிள்ளைப் பாசம் என்பது-ஒரு பிள்ளைப் பூச்சியல்ல; தேள்! (I-பக். 259)