பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 263 கிழக்கு வெளுப்பதில் கவலைப் படாது-ஆசை மனத்து அழுக்கு வெளுப்பதில் ஆலாப் பறந்தான்; அல்லெது? பகலெது? அறவே மறந்தான்! அவனை- - ஆட்டிவைத்தன-அகத்திணை ஆவல்களின் ஏவல்கள்; செவி சேராதொழிந்தன-சிறுகாலைச் சேவல்களின் கூவல்கள்! (1-பக். 35-36) இப்பகுதியைச் சொல்லும் முறையில் வாலியாரின் புகழ் வானத்தின் உச்சியைத் தொட்டுவிடுகின்றது. 'முதலிரவு-முதல் இரவு முடியாமல்-பகல் இரவு' என்ற தொடர் இரவு பகல் ஓயாமல் அநுபவித்த சிற்றின்ப நுகர்ச்சியின் அளவை அறுதியிடும் பாங்கு சிறப்புடையது. 'வானவப் பெண்-மீனவப் பெண் பிச்சாய்-கச்சாய்' 'காய்ச்சிய பால்-காமத்துப் பால் அத்தினபுரம்அந்தப்புரம் கிழக்கு வெளுப்பு-அழுக்கு வெளுப்பு' அகத்திணை ஆவல்களின் ஏவல்கள்-சிறுகாலைச் சேவல் கள் இந்த சொல்லிணைகள் உணர்த்தும் பொருள்களின் சாயல்கள் (Shades of meaning) இந்திர வில்லைப்போல், பல வண்ண ஒளிகளைப்போல் அமைகின்றன. சகுனியைப் பற்றி வாலியார் கூறும் சொல்வீச்சுகளில் சில: அவன்மூவகை மலங்களின் மொத்தக் கலவை; அவனது முக்கிய தொழில் மூளைச் சலவை!