பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருணனை வளம் 9 ஒரு வாய்நீர் நீர் வேண்டி..... ஒன்றுக்கும் உதவாக் கரை - வந்தாலும் உதவும் கரை! தினப்படி - தாகத்திற்கு - தண்ணி குடிக்க வரும் - தென்றலுக்கும்.... இக்கரை நீர்மீதுதான் - அக்கறை; ஏனெனில்- இக்கரை நீர்தான்- சர்க்கரை! எனினும்- இக்கரை நெடுக.... வண்டிவண்டியாய்- மண்டிக் கிடந்தது- வண்டல் கறை, அதைத் துடைக்க முயன்று - தோற்றுப் போனது - தண்ணிர் நுரை! (- பக்29-30) என்று கரையின் வருணனை நடைபெறுகின்றது. இதில் கரை, கறை, நுரை என்று முடியும் சொற்களின் ஒசை நயம் வருணனையை வளப்படுத்துவதைக் காண்கின்றோம். (1) (ஆ) !பிராமணக் கோடி' மகாநதியின் படுகையிலே உள்ள பல படித்துறைகளில் ஒன்று இது. பிரபலமான ஒன்று. இதைப்பற்றி வாலியார் வருணிப்பது: அந்தத் தீர்த்தங்கரையின் - திவ்வியத்தை அள்ளி - புலவோர்