பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 335 வளிப்புலியையே-நீ வென்றாய் என்றால்... என்போல் மடையனில்லைஇன்னமும் இங்கு நின்றால்! ஒரே பாய்ச்சலில்ஒடிப்போனது கீரி, நரி‘ஓ’வென்று ஊளையிட்டதுஉற்சாகம் தலைக்கேறி! தான் மட்டுமேமான்கறி மொத்தமும்தின்றது; அதன் திட்டம்வென்றது! (I-பக். 266-67) இந்தக் கதையைக் கூறிய கணிகன் மேலும் கூறுகின் றான், திருதராட்டிரனை நோக்கி: வேந்தர் பெருமானே! விளங்கியதாநரிக்கதை? மான்கறிக் கதை? நரித்தனம் இல்லாதுநடத்த இயலாதுதுரைத்தனம்; எதிலும்நெறித்தனம்,நீங்காதுநிற்பேன் என்பது-அசட்டு வெறித்தனம்! நமக்குக் காயத்தை ஏற்படுத்தாதவரைகடைப்பிடிக்கலாம்நியாயத்தை நியாயம்காயத்தை ஏற்படுத்தினால்கடைப்பிடிக்க வேண்டும்மாயத்தை!