பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கிளைக் கதைகள் * 349 கவுசிகனுக்குக்கலங்கியது பொறி, தலைகுப்புற விழுந்தது தலையிலிருந்த தானெனும் வெறி! காட்டில் நடந்தது-ஒரு காரியம் அப்படி! வீட்டில் இருப்பவள்-அதனை விவரிப்பது எப்படி? விந்தையிலும் விந்தை; என்வித்தை இவள்முன் கந்தை! வருந்தினான் வேதியன்வாய்விட்டுச் சொல்லி, அவன் குழப்பத்தைப் போக்கினாள்குடும்ப வல்லி! 'அந்தணனே! அறம் என்பது நுட்பமானது; அதுபற்றி இதுவரை நீ அறிந்ததென்பது அற்பமானது! கற்புடைய பெண்-முக் காலமும் ஒர்வாள்; அவள்சக்தியும் புத்தியும்சாணை தீட்டிய ஓர் வாள்! மறையவனே! நீமறையைக் கற்றவன்தான்; மறையைக் காறும்-தான்' மறையக் கல்லாதவன்; வசையோ இசையோ, வாழ்வோ தாழ்வோ; நேர்வது எதுவாயினும்நிட்காமியமாய் நில்லாதவன் !