பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது * 399 அஞ்சு பேருக்கும்அஞ்சு ஊர்களைக் கேள்; அதையும் மறுத்தானாகில்அஞ்சு வீடுகளைக்கேள்; அதையும் மறுத்தானாகில்அவனல்ல நமக்குக் கேள்; அமர் புரிய நாம் தயார்அவன் தயாரா எனக் கேள்! என்பது தருமனின் வேண்டுகோள். வில்லிபாரதத்தில் தருமன் பேசுவது: முந்துர்வெம் பணிக்கொடியோன் மூதூரில் நடந்துஉழவர் முன்றில் தோறும் நந்துாரும் புனல்நாட்டின் திறம்வேண்டு; நாடு ஒன்றும் நல்கான்ஆகில் ஐந்துர் வேண்டு; அவை இல்எனில் ஐந்துஇலம் வேண்டு; அவைமறுத்தால் அடுபோர் வேண்டு; சிந்துரத் திலகநுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செங்கண் மாலே ? இரண்டையும் ஒப்பிட்டுஅநுபவிக்கலாம். சொற்சுவை பொருட்சுவை இரண்டிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோலிருப் பதைக் கண்டு மகிழலாம். மூத்தோனின் சமாதானப் பேச்சைக் கேட்ட வீமனின் மனம் அனலாய் தகிக்கிறது. இந்நிலையில் பேசுகிறான்: அண்ணனே! உன்பேச்சுஅச்சத்தின் உச்சம்; துரியன் என்னளவில்துச்சத்தில் துச்சம்; அத்தருக்கனைக் காட்டிலும் 2 வில்லி பாரதம்-கிருட்டினன் தூது.9