பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9 (கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி கண்ணன் தன் அவதார காலத்தில் தாரதம்மியம் பாராது எல்லாத் தொழில்களையும் உவப்புடன் செய்தான். செளலப்பியமே வடிவெடுத்தது போன்றவன் கண்ணன். இத்தகைய கண்ணன்மீது, கவிஞர் வாலியார் எல்லையற்ற பக்தியுடையவர். பாண்டவர் பூமியில் கண்ணனைப் பற்றி அவர் எடுத்துக் கூறும் முறையிலும் பிற இடங்களில் அவனது பெயர்களைக் குறிப்பிடும் பாங்கிலும் வாலியாரின் ஈடுபாடும் பக்தியும் புலனாகின்றன. அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்ட முயல்வேன். 'கதை மாந்தர்கள்-அறிமுகம் என்ற இயலில் பார்த்தசாரதி என்ற தலைப்பில் எழுதியுள்ளவற்றை ஈண்டு மீண்டும் படித்துச் சிந்திப்பது பொருத்தமாகும். விடுபட்டவற்றை மட்டும் ஈண்டுக் காட்டி மேற்செல்வேன். வனவாசம், அஞ்ஞாதவாசம் எல்லாம் முடிந்த நிலை. சஞ்சயன் துதிற்குப் பிறகு கண்ணன் தான் தூது செல்வதாகச் செப்புகின்றான். வீமனும் பார்த்தனும் அதற்கு ஒப்பவில்லை. சகாதேவனைக் கருத்து கேட்டபோது அவன் நடைபெற முடியாத சிலவற்றைச் சொல்லி “கண்ணன் கால்களைக் கட்டிப் போட்டால் போர் வராது தடுக்கலாம்” என்கின்றான். அத்தை மகன். அதுமதி கோர வித்தை மகன் வாசுதேவன். பதினாறாயிரம்படிவங்களாகி நின்றான்; 'பிரிய சகாவே! என்னைப் பிணித்திடுக! என்றான்! 1 இயல் - 3. பக். 98