பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு என்பன போன்ற பாசுரங்களில் ஆழங்கால் பட்டிருத்தல் வேண்டும். இடைச் சேரியில்-ஒருமுறை இந்திரன் பெய்வித்தான்அடைமழை; அனைவரையும் காத்ததுஅருள் மழை! in குன்றை எடுத்தான்; குடையாய்ப் பிடித்தான்; மாடுகன்றைக் காத்தான்கேசவன்; வெட்க மழையில்முட்டமுட்ட நனைந்துவெலவெலத்துப் போனான்வாசவன்! காளியன் எனும்-கொடிய கட்செவி தன்னைமூளியன் ஆக்க-ஆயர் முதுகுடியைக் காக்க... மாதவன்-அதை மர்த்தனம் செய்தான்; அருள்மிகு யாதவன் அதன்மேல்நர்த்தனம் செய்தான்! (1-பக். 149) என்ற பாடற் பகுதியை அநுபவித்து வரையும்போது, கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை, காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான், குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம். " 20 பெரி. திரு. 3. 10: 8