பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (6) துறவு: துறவு என்பதுதொழிலைத் துறப்பதல்ல; தொழிலின் விளைவானதோல்வி வெற்றியைத் துறப்பது! யாது கிட்டும்? யாது கிட்டாது? எனயாதொன்றும் எண்ணாது-செய்யும் யோகமே... துறவு என்று தேர்க; யாண்டும்-அத்தகு யோகமும் துறவும். ஒன்றே என்று ஒர்க! நிட்காமிய கர்மத்தைநிதமும் பேணுவோன். அதையே-தனக்கு ஆதாரமாகக் கொண்டுயோக நிலைக்குஏறுகிறான்; அங்கவன் உரைக்கவொண்ணா சாந்தத்தில் ஊறுகிறான்! சமநிலையை... சாந்தநிலையை... துய்ப்பதன் பெயர்தான்துறவு, அங்கு நேர்வதுஇன்ப துன்ப உணர்வுகளின்இறவு! (III— Lö. 460-461)