பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 453 (7) நிலையாமை நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள்' என்று நிலைமையைப் பற்றிப் பேசுவார் வள்ளுவர். பாண்டவர் பூமியில் இந்நிலையாமை பற்றிச் சில இடங்களில் குறிப்புகள் உள்ளன. நாரதமுனிவன் நவின்றபடி இராசசூய யாகம் செய்வது பற்றி யுதிஷ்டிரன் யோசனையில் ஆழ்கின்றான். நிலையாமைபற்றிய சிந்தனை யால் அவன் முடிவு இழுபறியாய் இருந்தது. வத்திகளில்-சந்தன வத்தியாயினும்; வேந்தர்களில்-சக்கர வர்த்தியாயினும்... ஒளிரும்வரை ஒளிர்ந்தபின் மிளிரும்வரை மிளிர்ந்த பின் சாம்பல்தானே சேஷம்! வேறென்ன விசேஷம்? நாடு மேய்த்தவராயினும் மாடு மேய்த்தவராயினும் காடு மேய்கிறது-அவரைக் கடைசியில்; அரண்மனையனைய வீடு வாய்த்தவராயினும்-சிறு கூடு வாய்த்தவராயினும் காடுதானவர்-குடியுகும் கடைசி இல்! (I-பக். 83) என்பன போன்ற நிலையாமைபற்றிய சிந்தனைகளில் தருமபுத்திரனின் மனம் ஈடுபட்டிருந்தது. பால சந்நியாசி பார்த்தன் வாயில் வைத்து நிலையாமை தத்துவம் பேசப் பெறுகின்றது. 3 குறள்,334 (நிலையாமை)