பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிடித்து வந்தான் அந்தபிரபாசன் என்னும் வக! இதரவசுக்கள்இதுகுறித்து. முதலில் பதறினர்; முடிவில் உதவினர்! திருட்டு நடத்தை-ஞான திருட்டியால் முனிவன் கணப்பொழுதில்கணித்தான்; உடனே அஷ்டவசுக்களை அஷ்டசிசுக்களாய்பூமியில் பிறக்கப் பணித்தான்! (I-பக். 16) (iii) சுக்கிரர் ஏவியது: சுக்கிரன் மகள் தேவயானி; சர்மிஷ்டை அசுரகுலத்து அரசன் விருஷபர்வனின் மகள்; அழகு மிக்கவள். இருவரும் ஆருயிர்த் தோழியர். ஒருசமயம் இருவரும் ஆடைகளை மாற்றிக் கட்டிக்கொள்ள நேர்ந்தது. தேவயானி சர்மிஷ்டையைக் கோபித்தாள்; தேவயானியை ஒரு கிணற்றில் தள்ளிவிட்டாள். அம்புலி குலத்து அரசன் யயாதி அவளைக் கிணற்றிலிருந்து மீட்டான். இருவரும் தம்பதிகளாயினர். ஒரு சந்தர்ப்ப காரணத்தால் சர்மிஷ்டை அவர்கட்குத் தாதியானாள். யயாதிக்கு தேவயானி மூலம் இரு குமாரர்கள் பிறந்தனர். நாளடைவில் யயாதி சர்மிஷ்டை சபலத்தில் ஆட்பட்டு காற்றும் அறியாமல் கந்தர்வமணம் புரிந்துகொண்டான். இருவருக்கும் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். நெடுநாள் மறையாக இருந்த இந்த நிகழ்ச்சி ஒருநாள் அம்பலமானது. தேவயானி இதனைத் தன் தந்தை சுக்கிரரிடம் கூறி விம்மியழுதாள். யயாதியின் மேல் ஏவ-சுக்கிரர் மனத்துள்-ஒரு மந்திரத்தைச் செபித்தார்;