பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 45 'முத்தாரம்! முழுநிலவைஒத்தாரம்! முளரிப்பூங் கொத்தாரம்! மொத்தத்தில்பத்தாரம்! அத்துணையும்புத்தாரம்' எனும்படிவிதவித ஆரங்கள். அவனதுவித்தாரம் நிறைமார்பில்அவனிடம்-ஒர் உத்தாரம் வாங்காமல்விளையாடிக் கிடக்க... செளந்தர்யமும் செளலப்பியமும் சேர்ந்தாற்போல் சேவை தந்து... அன்பொழுக அணுகினான்யாதவன் மகளை, குந்தியெனும்மாதுளம் மடலை! (1-பக்.91-92) திருமண மாப்பிள்ளை வருவதுபோல் கம்பீரமாக வருகின்றான் சூரிய பகவான்; காயத்திரி மந்திரத்தின் கதாநாயகன். உடலழகும், உடையழகும், அணிகளின் அழகும், அவனிடம் விளையாடிக் கிடப்பனவாகக் கூறுவது கவிஞரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றது. 5. முனியுங்கவர்கள் பாண்டவர் பூமியில் முனிவர்களும் தலைகாட்டு கின்றனர்; அவர்களுள் வனவாசகாலத்தில் பலரைக் காணலாம். காவியத்தில் வருபவர்களில்: