பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மு. வியாசர். இவரைப் பற்றிய வருணனை: விழி! - நோன்பின் உக்கிர வெக்கையைக் கக்கிடும் அக்கினிக் குழி! உதடு! வாய்க்குள் சுரக்கும்-உபநிடத வாய்க்காலைத் தேக்கி வைக்கும்மதகு! சடை!-வெண் சாமரங்கள் தொங்குகின்றகடை! தாடி!-கடுந் தவசியெனக் காட்டுகின்ற ஆடி! (1-பக்:64-65) சூத்திரம்போல் வருணனை சுருக்கமாக அமைந்திருந் தாலும் விழி-குழி, உதடு-மதகு, சடை-கடை, தாடிஆடி என்ற சொல்லிணைகள் வீசும் ஒளி பளிச் பளிச்சென்று வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழலாம். (2) நாரதன் நான்முகனின் மைந்தன். ஓய்வின்றி உலகம் சுற்றுவது இவனது தொழில். இவனைப் பற்றிய கவிஞரின் வருணனை: நாரத முனிவன்-ஒருநாள் நேரில் வந்தான்; வழமைபோல்தண்ணி மேகமெனும்தேரில் வந்தான்! நாரதன் முகத்தில்நாளும