பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு முப்பத்துமுக்கோடிப் பேர்க்கும்மூளை மழுங்க-நான்தான் மூலம்! என் கண்கள்-ஐயம் இடாவிடில்-ஏது நெடுவானுக்கும் கடலுக்கும்நீலம்? நான் கொடுத்த-கூந்தல் ' நாற்றம் பெற்றுதான்ஏற்றம் பெற்றது ஏலம்! என் முகத்தைப் பார்த்தபின்-தன் மண்டை கனத்திற்கு-ஒரு முழுக்குப் போட்டது அழுக்கு நிலா, நான்பேசுவதைக் கேட்டபின்பெரிதாக-தன்னைப் பற்றிப் பித்துவதை நிறுத்தியதுபழுதத பலா! கோவைப் பழமென்றுகொத்த வந்தபோதுதான்-என் அதரச் சிவப்பு-கிளிகளின் அலகுகளில் ஒட்டியது; என் ஒயிலைக் கண்டு-தோல்வியை ஒப்புக்கொண்டு-கை ஒப்பம் இங்கு-கொடிமின்னல் கப்பம் கட்டியது! 21 கொங்குதேர் வாழ்க்கை (குறுந்) என்ற பாடலில் அடங்கியுள்ள கதையை நினைக்கச் செய்கின்றது.