பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 67 இனியவளே! இந்த. உருப்பசியின்உருவைக் கண்டால்-யார்க்கும் உருப்பெறும் உடற்பசி, உண்டாகாது குடற்பசி! (I-பக்:186) (6) ஜாலவதி: தேவலோகத்திலுள்ள அப்சரசுகளில் ஒருத்தி. மகரிஷி கெளதமரின் மகன் சரத்வான் புரியும் கடுந்தவத்தைக் கெடுக்க இந்திரனால் அனுப்பப் பெற்றவள். இவள் அழகைப்பற்றி வாலியார் வரைவது: தேவ வனத்தில் தேன் பிலிற்றும்... ஜாதிப்பூக்களில் ஜகத் ஜோதியாய் ஜ்வலிக்கும் ஒரே பூ ஜாலவதி! ஜாடைகள் ஜாலரா தட்ட. சதங்கைகள் ஜதிகள் சொல்ல... நாணம் நட்டுவாங்கம் செய்ய.. நளின நடைபயிலும்-ஒரு நீல நதி, நீண்ட சடைபுரளும-அநத ஜாலவதி! ஜாலவதியின் ஜாலத்தில் அவதியுறா-ஆண் ஜாதி என்பது-எந்த - ஜகத்திலும் இல்லை; மனத்தை