பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கவிதையும் வாழ்க்கையும்


பிரித்து, எடுத்துரைத்தால், சில சைவர்கள் அடிக்கவே வந்து விடுவார்கள். சில இலக்கியங்களைப் பதம் பிரித்து அச்சிடுவது கூடத் தவறு என்று கூறுவார் சிலர். பெரியோர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பற்றிப் பேச இவன் யார்?' எனச் சிலர் வாதிட ஆரம்பிப்பர். எழுத்தெழுத்தாகப் பிரித்து, தொடர் தொடராக ஆராய்ச்சி நடத்திப் பல கவிதைகளைப் பார்றிய எடுத்துக் காட்டும் மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் இந்நிலை கண்டால் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா?

ஆனால், நம் நாட்டில் உள்ள திறன் ஆய்வாளருள் ஒரு சிலரைப்பற்றியும் எண்ணத்தான் வேண்டும். ஒரு நூலை எடுத்து ஆராயத் தொடங்குமுன்பே, அந்நூலைப்பற்றி ஒரு விதமான எண்ணத்தைத் தம்உள்ளத்தே உருவாக்கிக் கொள்ளுகின்றனர், அவர் தம் எண்ணப்படியே எடுத்த நூலைப்பற்றி ஆராய்ந்து விடுகின்றனர். தமக்கும் தம் கொள்கைக்கும். ஏற்காத நூல்களைத் துருவித்துருவி ஆராய்ந்து, அவற்றில் எங்கே குற்றங்குறைகள் உண்டு என்று கண்டு, அவற்றை மட்டும் எடுத்துக் காட்டி, "ஆகா! இந்த நூலில் இத்தனைக் குறைபாடுகள் உள்ளனவே! என்று பழித்துரைக்கத் தொடங்கி விடுகின்றனர். பழித்துரைப்பதோடு, அந்நூல் நாட்டில் இருக்கவே கூடாது என்ற அளவு பிரசாரமும் செய்துவிடுகின்றனர். ஆனால், அதே வேளையில் அந்நூலில் உள்ள நற்கருத்துக்களை எடுத்துக்காட்ட விரும்புவதில்லை. அவர்கள் மனம், இதே முறையில் அந்நூலைப்பற்றி முன்னமே நன்முடிவு கொண்ட ஒருவர் அதில் குற்றமே இல்லை எனவும், தெய்வ நூலில் குறை காணுவது தவறு எனவும் கூறி, அவரைக் கண்டிக்கமுற்படுவர். இருவர்தம் செயலும் பொருத்தமுடையதாகாது. எதையும் ஆராய்ந்து, நலங்கேடுகளை அறிந்து, உள்ளதை உள்ளபடி உலகுக்கு உணர்த்தி, சீர்தூக்கி நிற்பதே திறனாய்வாகும்.அச்செயலைச்செய்பவனே சிறந்த அறிஞனவன்.

மேலைநாட்டுத் திறனாய்வாளர்களைப் பற்றிக் கூறும் விளக்கம், சற்றுப் பயன் உடைத்தாகும் எனக் கருதுகின்றேன். திறன் ஆய்வாளன் என்பான் நீதி மன்றத்து நடுவணர்