பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

105


போன்றவன்;[1] நல்லதன் நலனும், தீயதன் தீமையும் ஆராய்ந்தறிந்து நேர்மை,வழுவா நிலையில் முடிவு சொல்லத் தக்கவன். கைதிக், கூண்டில் நிற்கும் ஒருவன் உயிர், அந்த நீதிபதியின் கையில் இருக்கிறது. அந்த வழக்கைப்பற்றி நன்கு, ஆராயாது, ஒரு வேளை அவன் குற்றம் செய்யாதவனுயிருந்தும், அவனுக்கு, மரண தண்டனை விதிப்பின் என்னுவது? . அக்கூண்டுக் குற்றவாளி மரணமடைவது ஒருபுறமிருக்க, அந்த நீதிபதியின் பண்பாடும் நீதிமன்றத்தின் நேர்மையும் கெட்டொழியு மன்ருே? ஆம்! இதனாலன்றோ, தான் ஆராயாது கொடுமை இழைத்துக் கேர்வலனக் 'கொலை செய்த' பாண்டியன் நெடுஞ்செழியன், அச்செயல் தன்னைப் போன்ற மன்னர் செவிப்படுமுன், ‘தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலனாய் அரக் கட்டிலில் உயிர் துறந்தர்ன். அந்த நிலையிலேதான் திறனாய்வும் அமைகின்ற்து. நல்ல இலக்கிய்ங்களைத் திறனாய்ந்து அவற்றின் நலன் காண விரும்புவோர் வழுக்கி விழலாகாது. தம் கொள்கையை, அதில் புகுத்திப் பொருள்காண முயலலாகாது. தமக்கு விருப்மிருப்பினும், இல்லையாயினும், எடுத்துக்கொண்ட கவிதையில் உள்ள நலங்கேடுகளை அப்படி அப்படியே காட்டல் வேண்டும். ஒன்றைக் காட்டி ஒன்றை மறைப்பதோ, தம் கருத்து அதில் காணவில்லையானல், அந் நூல் நாட்டுக்கே ஏற்றதின்று என்று கூறுவதோ திறனாய்வாளனுக்குப் பொருந்திய செயலாகாது.

இந்த நிலை நம் நாட்டில் உண்டாகக் காரணம் ஒனறு தான் கலையை, இலக்கியத்தை, கவிதையை அரசியலோடு இந்நாட்டில் இன்று பிணைத்துப் பார்க்கின்றார்கள். அதுவே உண்மைக் கவிதை நலனை உணர முடியாது இடர்ப்படும் வழியாகின்றது: , அரசியல்' சதுரங்கத்தில் கால் வைத்து விளையாட நினைக்கின்றவர்கள், கவிதை" இயற்றிட்டும்: கற்பனயில் திளைக்கட்டும் ஆனால், முன்னர் இயற்றிய


  1. 1. The oxford English Dictionary, Vol. Il Critic—one who pronounces judgement on anything or person.

க. வா.—7