பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கவிதையும் வாழ்க்கையும்


நிலையில் அது உள்ளது. சாதாரண ஆலமரம் பழுத்தால், அதில் வந்து கூடும் பறவைகள் நிலையை ஒரு புலவர் உவமையாகக் கூறுவதும் நினைவுக்கு வருகின்றது."

‘ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தங்குடி என்றே வாழும்’.

என்ற உவமையே அது. இது போன்று செல்வம் உண்டான காலத்துப் பலர் வந்து சேர்வர் என்ற பொருளைப் புலப்படுத்துகிறார் அப் புலவர்.

‘வாலிபர் வந்து தேடி வந்திப்பார் கோடி கோடி
ஆலிலை யாதி போனால் அங்குவந்து இருப்பார் உண்டோ?’

என்று தாம் கூற விரும்பும் பொருளையும் இவ்வடிகளில் அவர் காட்டிவிட்டார். வள்ளுவர் மக்கள் பயன்படுத்தும் நல்ல பழமரத்தையே உவமையாகக் காட்டுகின்றார். அதிலும் உவமை நன்கு திறம்படப் பொருந்துகின்றது. அனைவரும் சென்று பற்றலாம் என்ற காரணத்தால் வழியல்லா வழியில் பழுக்குமுன் காய் கனிகளைப் பறிப்பின் அதனால் பயன் விளையாது, அவலமே நேரும் என்பதைக் கருத்தில் வைத்து, 'மரம் பழுத்தால் ஒத்து' என உவமையை விளக்குகின்றார். அதுபோன்றே செல்வம் நல்லானிடத்தில் சேர்ந்துள்ளமையின் எப்படியும் பெறலாம் என்று வழியல்லா வழியில் செல்லின், நலமன்றித் தீங்கே விளையும் என்பதும் அவர் கருத்து. மற்றும் வேண்டுவார்க்கு மட்டுமன்றி, அல்லார்க்கும் அது பயன்படும் என்பதும் அவர் கொள்கை. அவர் குறள் இதுதான்:

“பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கட் படின்”.
(216)

மற்றவரை வாழ்த்துவது சிறந்ததுதான். ஆயினும், ஒரு சிலர் தம்மை உயர்ந்தவரெனக் கருதி, மற்றவரை மதியாது வாழ்வாராயின், அவர்களைப் பழிக்காதிருக்க முடியுமா? அவர்களைப்பற்றி வள்ளுவர் போன்ற அறநெறி வகுத்த நல்லவர்கள் ஒன்றும் கூறாது விடின், உலகில் சிலராவது அவர்களைப் பின்பற்றி . வாழ விரும்ப மாட்டாரா? அவ்வகையில் அறநெறிக்கே இழுக்கு நேருமன்றோ! ஆயினும், தீயார் இயல்பை உள்ளது உள்ளபடியே எப்படி எடுத்துக் காட்டுவது? எடுத்துக்