பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கவிதையும் வாழ்க்கையும்



யாகக் கூறின், அது வள்ளுவர் பண்பாட்டிற்பட்ட நாகரிகமாகாது. ஆகவே, அவ்வுலகம் பற்றிக் கூறவிரும்பியதை உவமை மூலமே காட்டுகின்றார். அதில் அவர் கவிதை நலன் சிறந்திருப்பதைக் காணுதல் வேண்டும். இதைப் போன்றே கயவர் பற்றிய கொடுமையையும் அவர் உள்ளம் எண்ணி யிருக்கும். அவரால் நேரும் கொடுமையைக் கூறல் நாகரிகமாகாது என அவர்தம் கவிதையுள்ளம் கருதியிருக்கும். எனவே, அதையும் ஒரே உவமையில் அமைத்து அதிகார முறையிலேயும் பொருத்தி, நன்கு விளக்கிவிடுகின்றார். ஆம், அவர் கயவர், தேவர் இவர்தம் நிலையை ஒருசேர உவமையால் விளக்கும் திறம் உயர்ந்ததாகும்.

கயமை என்னும் அதிகாரம் குறளில் ஒரு பகுதி. அதில் கயவரைப்பற்றிப் பேசுகின்றார் வள்ளுவர். அப்போதுதான் தேவரைப்பற்றியும் கூறவேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது. நாகரிக முறையில்,

'தேவ ரனயர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.'

(1078)

என்று காட்டிவிட்டார். இக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். பரிதியார் உரை தவிர, மற்ற அனைத்தும் ஒத்திருக்திருக்கின்றன. அவரனைவரும், தேவர்கள், மேல் கேட்பாரும் தடுப்பாரும் இன்மையின், அவரவர் விருப்பின்படியே செயல்களைச் செய்வர்; அதுபோன்று இங்குக் கயவரும் செயலாற்றுவர், என்று நாகரிக முறையில் தேவர் செயலைக் காட்டி விட்டனர். கயவரைப் பற்றி ஓரளவு தெரியும். அவர்கள் யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் தம் மனம்போன போக்கில் போவார்கள் என்பது அறிந்ததே. இதை ஒர் உவமையால் விளக்கவேண்டும் என்னும் நியதியும் இல்லை. எனினும், வள்ளுவர் இங்குத் தேவர் நிலையைக் காட்டி, அவரைப்பற்றி உலகம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இவ்வுவமையை அமைத்தார் என்று கொள்ள வேண்டியுள்ளது. தேவரைப் பற்றித் தனிப்பாட்டோ, அதிகாரமோ அமைத்து அவரைப் பழித்துரைத்தல் சிறந்ததாகாது. எனவே