பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கவிதையும் வாழ்க்கையும்



தலைவியை மறத்தலாகவும் பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோன் உள்ளத்தே விளங்கி நின்ற வாறு காண்க", என்று நன்கு விளக்கம் தந்துள்ளார் : (தொல்.அகத்திணையியல் உரை). இதற்குமேல் நம் விளக்கம் ஏனோ!. இனி, இறைச்சிப்பொருள் பற்றிக் காண்போம். இதற்குப் பல்கலைக்கழக அகராதி, 'கருப்பொருளின் உள்ளே கொள்ளும் பொருள்' எனப் பொருள் கூறுகின்றது1.

'இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கில் தெரியு மோர்க்கே.'

(தொல், பொருள். 35)

என்ற சூத்திர்த்து உரையில், நச்சினார்க்கினியர் குறுந்தொகைப் பாட்டொன்றை உதாரணமாகத் தருகின்றார்.

'கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினபிடி உண்ணும் பெருங்கல் நாட!
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல,
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே'

(குறுந், 225)

என்ற பாடலே அது. இதிலும் முன் உள்ளுறை உவமத்தைப் போன்ற ஒரு வெளிப்படை உவமமும் கலந்துள்ளது. எனினும் அதில் விளங்குமாறு, இது நேரிய வழியில் செல்லாது, திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே,' என்றபடி, ஆய்ந்து பொருள் கொள்ளும் வகையில் அமைகின்றது. அதை நச்சினார்க்கினியர். இதனுள், "தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரசு உரிமையெய்திய மன்னன் மறந்தாற்போல, நீ இரந்து துயருற்ற காலத்து யான் தலைவியை நின்னோடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாது இன்று நீ வரைந்து கொள்வாயாயின், இவள் கூந்தல் நினக்குரிய, என்ற வழி, உவமையும் பொருளும்


1. Suggestive meaning conveyed indirectly by reference to the distinctive feature of the tracts of land. (Lex-Vọl I, p. 386)