பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

161


கற்கள் ஓடிப் பரவி ஒளி வீசுகின்றன. அந்தப் பரந்துள்ள ஒளி அண்டத்தில் நம் உலகம் ஒரு சிறிய உருண்டை - மிகச்சிறிய உருண்டை. அவ்வுருண்டையில் நம் நாடு எங்கோ ஒரு மூலை. அந்த மூலையில் ஓர் ஒதுக்கிடம் நம் வீடு. அந்த வீட்டில் நுழையும் கதிர்கள் பல. அவற்றுள் ஒரு கதிரில் எத்தனையோ கோடிக்கணக்கான அணுக்கள் நமக்கு புலனாகின்றன. சூரியன் ஒளி யின்றேல், அதுவும் புலனாவதில்லை. அந்தப் பல கோடி அணுக்களுள் ஓர் அணுவைப் பரந்த சூரிய மண்டலத்தோடு ஒப்பிடின், அதன் அமைப்பும் அளவும் எத்துணைச் சிறியனவாக அமையுமோ, அந்த அளவுதான் இந்த அண்ட முகட்டில் நம்உலகமும் மற்றைய எந்த உலகமும் பெறுகின்ற இடம் என்கின்றார் மாணிக்கவாசகர். இந்த உண்மையைத்தானே இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஒரு முகமாகக் கூறுகின்றார்கள்? அவர்கள் கண்டன சில; காணவேண்டுவனவோ கணக்கில.

இத்துணை ஆராய்ச்சி இங்கு நமக்குத் தேவை இல்லை தான். எனினும், நம் வாழ்வைப்பற்றி அறிந்துகொள்ளுமுன், இவ்வாழ்வின் தொடக்கத்தையும், வாழும் நிலத்தின் எல்லையையும், அதுபற்றிய பிறவற்றையும் ஓர் அளவு அறிந்து கொள்ளின், நம் வாழ்வின் நிலை ஒருவாறு புலனாகுமென்றே இத்துணைத்தூரம் சென்று வந்தோம். தூரத்தின் எல்லையைக் கண்ட அந்தக் கணக்கு வழியே காலத்தின் எல்லையையும் காண இயலும். அதன் எல்லையும் இவ்வாறே பல்கிப் பெருகிப் பல கோடி கோடி ஆண்டுகளாகச் சென்றுகொண்டேயிருக்கும்.

இவ்வுலகம் சூரியனிலிருந்து பிரிந்து வந்து எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆயின என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவ்வுலகமும், இதுபோன்றே பிற உலகங்களும் தோன்றிய காலங்களைப் பலவாக வகுத்துக் கூறுகின்றார்கள். இவ்வுலகில் உயிர் தோன்றியே பல கோடி ஆண்டுகள் கழிந்துவிட்டனவாம். எல்லாவற்றிற்கும் இறுதியாக மனிதன் பிறந்தே பன்னெடுங்காலம் கடந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளரின் அசைக்க