பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

கவிதையும் வாழ்க்கையும்


 கவிதைகளுக்கு மட்டுமன்று இந்த நீதி. வாழ்வில் பயன்படும் அனைத்துக்குமே இந்த நீதி பொருந்துவதாகும். இன்று நம் நாட்டில் நடைபெறும் மதுவிலக்கினை எடுத்துக்கொள்வோம். அரசாங்கம் தனது கட்சியின் அடிப்படைக் கொள்கை என்பதற்காக மதுவை நீக்கவேண்டும் என்று முயற்சி செய்கின்றது. முயற்சி நல்லதுதான்; வரவேற்கத் தக்கதுங்கூட. ஆனாலும், அது வெற்றி பெறவில்லை என்பதை யாவரும் அறிவர். அரசாங்கமே அறிந்து பலமுறை அவலக் குரல் எழுப்பியிருக் கிறது; மக்களை 'ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, சட்டத்தாலும் கட்டுப்பாடுக்ளாலும், பிரசாரத்தாலும் அது ஒழிக்கப்படாதது. ஏன்? ஆங்கில அரசாங்கத்தார் நாட்டை ஆளும்போது கள்ளுக் கடைகளையும் வைத்துவிட்டு மதுவிலக்குப் பிரசாரத்துக்கு ஒர் இலாக்காவும் அமைந்திருந்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், பிரசாரத்தின் மூலம் மதுவின் கொடுமைகளை விளக்கி மக்கள் மனம் மாறச் செய்யின், பிறகு கடைகள் தாமாகவே மூடப்பெறும்,' என்பதுதான். எனினும், அவர்கள் அதையும் சரிவரச் செய்யவில்லை. ஆனல், அவர்கள் காட்டிய காரணம் முழுக்க ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று என்பதை யார் மறுக்கக்கூடும்? எத்தனை சட்ட திட்டங்களும் கட்டுப் பாடுகளும் மக்கள்மீது திணிக்கப்பெற்உள்ளனலுங்கூட, அவை, அவர்களைச் சிறிது அடங்கியிருக்கச் செய்யுமே ஒழிய, அவர்கள் வாழ்வினது அடிப்படைகளை வேரறுக்க முடியாது. அவர்கள் உள்ளத்திலே குமுறிக்கொண்டிருக்கும் வாழ்வு பற்றிய கொள்கைகள் ஒரு நாள் வெளிப்பட்டுத்தான் தீரும். அது போன்றே கள் குடிப்பவர்தம் வாழ்க்கை அதனோடு பின்னிக் கிடக்கின்றது. அது சரியா தவறா என்று நாம் இங்கு ஆராய வேண்டா. வரலாற்றையும் இலக்கியங்களையும் ஆராயினும், அதைத் தவறு என்று காட்ட முடியாது. சங்ககால இலக்கியங்களிலே இக் கள் பேசப்படுகிறது. 'தேக்கிலை பெய்த தேறல்' என்று, புலவரால் போற்றப்படுகின்றது. இவற்றை உண்டு வாழ்ந்த மக்கள் இருந்திருக்கிறார்கள். வடமொழிக் காவியங்களிலும் சோமபான மென்றும் பிறவகையிலும் போதைதரும்