பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

கவிதையும் வாழ்க்கையும்


 வகையில் எத்தனையோ கவிதைகளை எடுத்துக் காட்டலாம், உதாரணமாக இரண்டொன்று காட்டுவது அமையும் என எண்ணுகின்றேன்.

தமிழ் நாட்டின் வாழ்வை இன்ன வகையானது என்று யார் வரையறுத்தார்களோ, நாமறியோம். அவர்தம் வாழ்க்கையும் வரம்பும் யாரும் தவறு காணாத வகையில் அமைந்து செல்கின்றன. மனத்தினும் மாசு காணா வாழ்வு அவர் வாழ்வு. பகைவனுக் கருள்வாய் என்று பரந்த மனப்பான்மையில் செல்லும் வாழ்வு அவர் வாழ்வு. இந்த நெறியிலே மற்றவ லுக்குக் கொடுமை இழைக்க இடமில்லை. தவறிக் கொடுமை இழைத்தால் நெஞ்சறிந்து அஞ்சி அஞ்சி அழுங்கித் தன் தவற்றுக்குக் கழுவாய் தேடவேண்டும் என்பது அவன் வாழ்க்கை நெறி. இந்த நெறிக்கு மாசு உண்டாகும் வகையில் யார் பாட்டிசைத்தாலும்-அது வாழ முடியுமா?

சென்ற நூற்ருண்டில் தமிழ் நாட்டில் எத்தனையோ தலபுராணங்கள் தோன்றின. அவற்றின் கவிதைப் பண்பும் சுவையும் காவிய நடையும் கற்போர்க்கு விருந்தாய் அமைவனதாம். கச்சியப்ப முனிவர் பாடிய காஞ்சிப் புராணம் இலக்கியச் செறிவு வாய்ந்தது என்பர். தணிகைப் புராணமும் புலவரால் ஆய்ந்தாய்ந்து ஆழம் காண முடியாத 'பொக்கிஷம்' என்று பேசப்படுகின்றது. உண்மையே. இவை தவிர, எத்தனையோ தலங்களுக்கு எத்தனையோ புராணங்கள் உள்ளன. எத்தனைச் சிவலிங்கங்கள் உண்டோ, அத்தனைப் புராணம் என்றுகூடச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். மதிப்பு வாய்ந்த மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டும் நூற்றுக்கு மேலான தலபுராணங்களைப் பாடியுள்ளார் என்பர். இன்னம் குட்டிக் கவிஞர்கள் எத்தனை எத்தனையோ குட்டித் தலபுராணங்களை எழுதி வைத்துள்ளார்கள். அவைகளெல்லாம் இன்று எங்கே போயின? ஒரு நூற்றாண்டுக்குள்-பாவம்!-அவை சவக்குழியினைச் சார்ந்துவிட்டனவே? எப்படியோ, யாரையோ பிடித்து ஒரு பதிப்பு, அந்த முதற் காலத்தில் அச்சிட்ட பிரதிகள்.சில மூலை முடுக்குகளில் கிடைக்