பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

கவிதையும் வாழ்க்கையும்


செல்வதைத் தடுத்து நிறுத்தி, நில்லாத வாழ்வியல்பு காட்டி, வாழும் சில நாளில் காதல் வாழ்வில் திளைக்கவேண்டும் என்று தான் தம் காஞ்சியை முடிக்கின்றார். அவர் வாக்கையே காட்டி விடுகின்றேன்:

‘பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே; உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டுகழிந் தோரே’'

(மதுரை. 234-237)

என்று நிலையாமையைக் கூறி, பின்னர்ப் பல்வேறு பொருள்களில் மன்னன் கருத்தை ஈர்த்துக்கொண்டே சென்று, பின்னர் அவன் 'பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி, மன்னரும் பிறரும் வாய்மொழி கேட்க, புலவரும் பிறரும் புகழ்ந்து சூழ்ந்திருக்க வேண்டும், என்கிறார் இறுதியாக.

“இலங்கிழை மகளிர் பொலன்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே!”

(மதுரை. 779-782)

என்று, அவன் பெற்ற அந்த வாழ்நாளில் காதல் மகளிர் தேறல் கொடுப்ப உண்டு, அவரொடு கலந்து வாழ்தலே அவன் வாழ்க்கைப்பேறு என்று முடிக்கின்றார். எனவே, இக்காஞ்சியானது துறவை வற்புறுத்தாது, நில்லாத உலகியல்பால் நிலைத்து நிற்கும் வரையில் அறமாற்றிப் புகழ் கொண்டு, மறம் கடிந்து, மனைவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதையே வற்புறுத்தித் தமிழர்தம் அடிப்படையான வாழ்க்கைநெறி இதுவே என்பதைக் காட்டுகிறது.

இம் மதுரைக் காஞ்சியில் ஆசிரியர் ஐவகைப்பட்ட நிலங்களில் வாழும் மக்கள் வாழ்க்கையைத் தனித்தனியே காட்டி விளக்குகின்றார், தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது திறத்தையெல்லாம் காட்டுகின்றார். நாம்