பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

கவிதையும் வாழ்க்கையும்


களின் தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர்த்தோட்டங்களிலும் வாடி வருந்தும் கொடுங் காட்சியை அவர் எண்ணி எண்ணி ஏங்கி நின்றார், வாழ்கின்ற மக்களுக்குள் சாதி சமய வேறுபாடு களும் அவற்றின் வழி உண்டான பிணக்குக்களும் அவர் உள்ளத்தை உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணி எண்ணிப் பாடல்களை உதிர்க்கின்றார் அவர்.

"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ!

என்று நாட்டிலே இருக்கும் வேறுபாடு காரணமாக அயலான் ஆளுதல் எவ்வாறு பொருந்தும் எனக் கேட்கின்றார். ஓர் ஆங்கிலேயனை எதிர்த்து,

"நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ பன்றிச் சேய்களோ!
நீங்கள்மட்டும் மனிதர்களோ? இது நீதமோ?

என்று கேட்டு, மனித உணர்வில் அனைவரும் ஒன்றி அடிமை வாழ்வை நீக்க வேண்டிய நிலையை விளக்குகின்றார். இன்னும் இது போன்ற எத்தனையோ பாடல்கள் அவரால் பாடப்பட்டன. அக்காலத்தில் அவர் பாடலுக்கே ஒரு தனி உணர்ச்சி ஊட்டும் சத்தி இருந்தது. எனினும், இன்று விடுதலைபெற்ற இந்தியா வில் அந்தப் பாடல்களை யாரும் பாடவில்லை. பாடவேண்டிய தேவையும் இல்லையன்றோ! அவை அந்தக் காலத்துக்கு இன்றியமையாதனவாயிருந்த போதிலும், அன்றைய மக்கள் உள்ளத்தைத் தட்டி எழுப்பும் திறம் பெற்றனவாய் இருந்த போதிலும், இன்று அவை மக்களுக்குத் தேவையற்ற பாட்டாகி விட்டன. அன்று ஆங்கிலேயர் அவற்றைப் பாடக்கூடாது என்று சட்ட திட்டங்களால் தடுத்து நிறுத்தியபோதிலும் ஊர் தொறும், தெருத்தொறும் அப் பாடல்கள் முழங்கின. இன்று யாரும் தடுப்பாரற்று. யாரும் பாடலாம் என்ற நிலையிருந்தும்,