பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

73



அவற்றில் அமையும் சிறப்பு உறுப்புக்கள் யாவை? அவற்றின் அமைப்புயாது? இவற்றையெல்லாம் தொகுத்து விளக்கி இன்ன வகையில் அமைவதே பெருங்காப்பியம் என்றார்கள். நம் நாட்டில் உள்ள சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவை களைத்தான் அவர்கள் மேல்வரிச் சட்டமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அவை செல்லும் போக்கையும் வகையையும் ஒட்டித்தான் இலக்கண வரம்பு அமைந்துள்ளது. அமைந்த அந்த இலக்கண வரம்பின்வழிப் பின்ளிைல் பலர் பல காப்பியங்களைப் பாடி இருக்கலாம். அவற்றுள் பெரும்பாலன நாட்டில் நடமாடாத இலக்கியங்களாகவே சென்றன என்னலாம். இந்தப் பெருங்காப்பியத்தின் இலக்கணம் கண்ட ஆசிரியர், இதற்குரிய இலக்கணங்கள் சில குறைபட்டு வருவனவற்றைக் காப்பியம் எனக்கொண்டனர். இவ்வாறு பிற்காலத்து இந்த வகையில் இலக்கணங்களெல்லாம் பெருகிவிட்டன.

கவிதைகளை இத்துணை வகைகளாகக் காண்பதன்றி, இன்னும் எத்தனையோ. பிரிவுகளில் பர்குபடுத்தி விட்டார்கள். பாடுவோர் உள்ள எழுச்சிக்கு ஏற்பக் கவிதை பல்வேறு பெயர்களோடு பல்வேறு வகையில் உருப் பெற்றுள்ளது. பாட்டியல் என்ற ஒரு நூலைப்பற்றி மேலே கண்டோம். அது ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள கவிதைத் தொகுதிகளையெல்லாம் வரையறுக்கின்றது எனலாம். ஆனால், இந்தக் காலத்தில் வரையறுக்க ஒரு பாட்டியல் யாராவது எழுதுவாராயின், அது பழையதினும் பன்மடங்கு விரிவடையும் என்பது திண்ணம். ஆம்! விரிவடையட்டும். மொழி வளர்ச்சி அதில் தானே அமைந்துள்ளது. ஆனல் விரிவடையும் அத்துணை வகைக் கவிதைகளும் உயிர் வாழ்க்கைக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதை எண்ணும்போதுதான். ஏன் இத்த்ன் பிரிவு? என்று சிந்தை தடுமாறுகின்றது. அது பற்றிப் பின்னர் ஓரிடத்தில் காண்போம். எனவே, இங்கு அதைப்பற்றி ஆய்வதை விட்டுவிட்டு மேலே செல்லலாம்.க. வா.—5