பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

75


விளக்கும் வகையில் நல்ல பாடல்களும், கதைகளும்; நாடகங்களும் வரவேண்டுமென்று முயல்வதை நாம் பார்த்திருக்கின்றோமே! அதைப் போன்றே அன்றும் பாடல் வழி மக்கள் மனத்தைத் தம் பக்கல் ஈர்க்க எண்ணினர் சமய வாதியர். சமணன் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினல், சைவன் நான்கு பிள்ளைத்தமிழ் இயற்றின்ை அவன் ஒரு கலம்பகம் செய்தால், இவன் மேலும் மூன்று கலம்பகங்கள் செய்தான். இப்படியே எண்ணற்ற சிற்றிலக்கியங்களாகிய கவிதைத் தொகுதிகள் நாட்டில் உலவலாயின. கவிதை வளர்ச்சிநிலை கண்டு ஒரளவு மனத்தில் மகிழ்ச்சி பிறந்தபோதிலும், அவை சமயக் காழ்ப்பை நாட்டில் விளைவிக்க வழியாய் இருந்தமையின் வருந்தவும் நேர்கின்றது.

சமய வேறுபாடுகளாலே பல சிற்றிலக்கியங்கள் தோன்றுகின்றன என்றாலுங்கூட, அத்துணை இலக்கியங்களும் சமயப் பூசல் நடைபெற்ற அந்த இடைக்காலத்திலேதான் உண்டாயின என்று சொல்வதற்கில்லை. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகும், சென்ற நூற்றாண்டிலுங்கூடப் பலப்பல சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஆகவே, சமயப் பூசல் ஒரளவு காரணமாயினும், பெரும்பான்மையான காப்பியங்கள் உண்டானதற்குக் கால மாறுபாடே காரணம் என்று. கொள்வது பொருத்தமானதாகும். இன்று சைவ வைணவ, பெளத்த சமணக் காப்பியங்களோடு மகமதிய கிறித்தவக் காப்பியங்களும் தமிழ் நாட்டில் உள்ளன. இன்று தமிழ் இலக்கியங்கள் என்று கொள்ளக் கூடியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவற்றுள் பெரும்பாலான சமயச் சார்புடையன வாகவே அமைதல் கூடும்.

இத்தகைய காப்பியங்களைத் தவிர, கவிதைத் தொகுதி வேறு வகையாலும் விரிவடைகின்றது. அதுவே அறநூற்றொகுதி. அறமுரைத்த வள்ளுவர் வாய் மொழியாம் தெள்ளிய குறள் தொடங்கி, இன்றைய பாரதியாரின் ஆத்திசூடி வரையில், எத்தனை எத்தனையோ அறம்,விளக்கும் கவிதைகள் நாட்டில் உள்ளன. குறளொடு இணைந்த