பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. கவிஞர் வெற்றி


'கவிதைப் புலமையில் வெற்றி கண்டானே அன்றி வீழ்ச்சி அடைந்தானோ, ஆனால் கவிஞன் வாழ்வில் வீழ்ச்சி அடைந்தவனே,’ என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எண்ணுவது அவ்வளவு சரியன்று. கவிஞன் வாழ்வின் வெற்றியைக் கண்டவனேயாவன். உண்மைக் கவிஞன் எவனும் வாழ்வில் தோற்றான் என்று கூறுவதற்கில்லை. அவன் தோல்வியைப் பல கோணங்களிலிருந்து பலர் பலவகையாகக் காண முயல்கின்றனர். சாதாரணமாக நாட்டிலே வழங்கும் ஒரு பழமொழி உண்டு. கல்வியும் செல்வமும் ஓரிடத்திலே சேர்ந்திரா என்பது அதன் கருத்து. கலைநலமெல்லாம் பெற்ற கலைஞன், செல்வமற்று வாழ்க்கையில் வாடத்தான் வேண்டும் என்பது அதன் முடிவு போலும்! அதைப் போன்றே செல்வம் உள்ளவிடத்துக் கல்வியே சேராது எனவும் கூறுகின்றனர். அக் கருத்துக்கள் பற்றிய பாடல்களுங்கூட வெளிவந்துள்ளன. ‘பூவின் கிழத்தி பொலிதலாற் சேராளே, நாவின் கிழத்தி நயந்து,’ என்ற செய்யுள் அடிகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளவைதாம். இவற்றால் கலைஞன் அல்லது கவிஞன் என்றும் ஏழ்மையிலேயே உழன்றான் என்று கொள்ளுவர் ஒரு சிலர். ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், நிலை வேறு என்பது நன்கு புலனாகும்.

இவர்தம் கொள்கைக்கு ஏற்பத்தான் நாட்டில் கலைஞனையும் கவிஞனையும் ஏழையாகவே காட்டுகின்றனர். கவிஞன் என்றால். ஏதோ கிழிந்த உடை, வறண்ட தலை, வற்றிய வயிறு, பலநாள் பட்டினி, மெலிந்த தோற்றம்—இவையே பலர்முன்,