பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

79


ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத்திலே ‘இளைய பிட்டு’ (Pitt the younger) ஆண்ட காலத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்நாட்டில் இலக்கியப் புலவர்களுக்கு இருந்த ஏற்றத்தைக் காட்டப் போதுமானதாகும். நாட்டின் வரவு செலவுக் கணக்கை அறுதியிடும் காலத்து இலக்கியத்துக்கும் ஒர் அளவு ஒதுக்க வேண்டும் என்று ஒர் உறுப்பினர் வேண்டியிருப்பார் போலும். அதற்குத் தலைவர் இலக்கியம் தன்னைத்தான் காத்துக்கொள்ளும். நாம் கவலைப்பட வேண்டா, என்று கூறினராம். ஆனல், அதற்குப் பதிலாக, ‘ஆம், அது தன்னையும் காத்துக்கொள்ளும், உன்னையும் கவனித்துக்கொள்ளும்.[1] என்ற தொடர் புறப்பட்டதாம். அதிலேதான் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது! அலட்சியமாக, இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை மக்களும், நாடாளுபவரும் ஒரு வேளை ஒதுக்க நினைத்தாலும், உண்மையில் அவ்வாறு செய்வது அவ்வளவு எளிதன்று என்பது புரிகின்றதன்றோ அரசர் முடி சாய்ந்த போதிலுங்கூட, அவர் காலத்தில் தோன்றிய கவிதைகளும் கலைகளும் என்றென்றும் வாழ்ந்து, அவ்வரசர் பெயரை உலகில் நிலைநாட்டிக்கொண்டிருப்பதை அறியாதார் யார்? மேலை நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதுபோன்று, கவிஞர் விரும்பினால், தாம் வாழ்வதோடல்லாது, தம் நாட்டையும் உலகையுமே வாழ்விக்கக் கூடுமே! தம் காலத்து வாழும் மன்னர்களையெல்லாம் மாநிலம் உள்ளவரை பெருமையோடு நிலைபெறச் செய்யலாமே! சங்க காலத்தில் வாழ்ந்த எத்தனை புலவர் இன்றுவரை கணக்கற்ற மன்னர்களை வாழச் செய்துள்ளனர்? வீறு பெற்றுச் செல்வம் மிக்குச் சிறந்து வாழ்ந்த மன்னரைப்பற்றியெல்லாம் நாம் இன்று அறிய முடியாதே! ஆயினும், எளிய மன்னனுயினும், அவன் புலவர்தம் வாய்மொழியிற் படுவாயிைன், அவன் என்றென்றும் சிரஞ்சீவியாக நிற்கும் அமரத்துவம் எய்தி விட்டவனல்லவோ! எத்தனைக் குறுநில மன்னர் இன்று நம்மிடையே புறநானூற்றிலும் பிற இலக்கியங்களிலும் காட்சியளிக்கின்றனர்! எத்துணைச்


  1. 1, ‘Literature will take care of itself and you too.”