பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

87


செல்வத்தில் புரள வேண்டும்’ என இறைவனை வேண்டித் கொள்ளவில்லையே! எனவே, செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்ற பழமொழிப்படி அமையும் ஒன்றே. அத்தகைய நிலைத்த செல்வங்களை நாடிச்செல்லும் புலவர் உள்ளங்கள் வெறும் பொருட்செல்வத்தை மட்டும் பொதிந்து வைக்க விரும்பவில்லை. செல்வம் தனக்கெனச் சேர்த்து வைக்கப்படுவ தன்று: எல்லோரிடத்தும் சென்று பயன்படத் தக்கது. இவ்வுண்மையினை வறுமையைப் பற்றி வருந்திப் பாடிய பெருஞ்சித்திரனரே விளக்குகின்றார்.

நாட்டில் புலவர்களை ஆதரிக்க நல்ல புரவலர்கள் அக் காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். புலவர்தம் பாடலுக்கு ஏங்கும் பாராளும் மன்னர்கள் இருந்தார்கள் என்பதை நெடுஞ்செழியன் பாட்டால் அறிந்தோம். இவ்வாறு கேட்ட போது கேட்டதைத் தரும் மன்னர்கள் இருக்கும் காலத்தில் புலவர்கள் தங்களுக்கெனச் செல்வத்தை ஏன் சேர்த்துச் சேர்த்து வைத்துக் கொள்ளல் வேண்டும்? இவ்வுண்மை, பொருளாதாரத்தைப் பற்றி அதிகமாகப் பேசும் இன்றைய உலகுக்கு நன்கு தெரிந்த ஒன்றேயாகும். வங்கியில் (Bank) தம் தேவைக் கெல்லாம் வேண்டிய பணத்தை வேண்டியாங்குப் பெற் (over draft) வசதி உள்ளவர் தம்முடைய ஒரு சிறு தொகையை கொண்டே, பேரளவில் —கோடிக் கணக்கில்கூடத் தம் வாணிபத்தைப் பெருக்கிக் கொள்ளவில்லையா? அதைக் கண்டு இவ்வுலகமும் அவர்தம் வங்கிக்கணக்கினை மறந்து அவரைப் பெருவணிகர் என்றும், பெருஞ்செல்வர் என்றும் புகழ்கின்றதே! அதே நிலையில் வறுமையில் வாடிய மேலே கண்ட பெருஞ்சித்திரனர், குமணன் நல்கிய வளனைப் பெற்ற பிறகு, பெற்றது கொண்டு செய்த, பெருஞ்செயலை நோக்கின், புலவர் வாழ்வில் வெற்றி கண்டவரா, அன்றித் தோல்வியுற்றவரா என்பது விளங்கும்.

தன்னை வந்து பாடிய பெருஞ்சித்திரனருக்குப் பொன்னும் மணியும் பிற பொருள்களும் வாரி வழங்கினன் வள்ளல் குமணன். அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தம் வீடு