பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கவிதையும் வாழ்க்கையும்


சேர்ந்தார் புலவர்; செல்வத்தை மனைவி கையில் கொடுத்தார். அந்த மனைவியைப்பற்றியும், அவள் வறுமையில் வாடிய விதத்தைப் பற்றியும் குமணனிடம் நாம் மேலே கண்டவாறு நெஞ்சுருக நைந்துரைத்தார். அவன் அக்குறையினைக் கேட்டுக் கொடுத்த பொருளைத்தான் இப்போது மனைவியிடம் ஒப்படைத்தார் புலவர். வாடிய பயிருக்கு மழையென வந்த அந்தப் பெருஞ் செல்வத்தைக் கண்டு அவள் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும்; தன் வீட்டு வறுமை நீங்க அதனால் ஆவன செய்திருப்பாள். குமணன் தந்த செல்வம் அவர்கள் குடும்பத்துக்குத் தலைமுறை தலைமுறைக்கும் உதவக் கூடியதுதான். எனினும், அவர்கள் அத்துணைச் செல்வத்தையும் தாங்களே சேர்த்து வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அது முறையற்றதுங் கூட. எனவே, பெற்ற செல்வத்தைச் சுற்றத்தாருக்கும் மற்றவருக்கும் வாரி வழங்கச் சொல்லுகின்றார் புலவர். தம் வறுமை நீங்கியதோடன்றி, வையத்து வறுமையை நீக்க வேண்டு மென்பது அவர் உள்ளக்கிடக்கை. உண்மையில் கவிஞன் எவனுயினும், அதைத்தானே எண்ணுவான்? அவர் தம் மனைவியை நோக்கி, குமணன் தந்த வளனைத் தாமே ‘வல்லாங்கு வாழ’ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், எல்லோர்க்கும் வாரி வழங்கவேண்டுமென்றும் வற்புறுத்துகிறார்.

‘நின்னயங் துறைார்க்கும் நீநயங் துறைார்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கு என்னுது என்னெடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னது நீயும்
எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்துங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் தல்கிய வளனே.’
(புறம். 163)


என்ற அப்பெருஞ்சித்திரனர் வாக்கு,அவர் தம் வாழ்வில் வெற்றி பெற்றதைத்தானே காட்டுகிறது! பகைவர் நாட்டின்மேல்