பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

89


படையெடுத்து வென்று வாகை சூடிய போர் மன்னன்; அப்பகைவர் நாட்டிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் மணியையும் தன் நாட்டுப் புலவருக்கும் மற்றையோருக்கும் வாரிவழங்கும் பெருநிலை இங்கே பெருஞ்சித்திரனரிடமும் காணப்படுகின்றதன்றோ! சொல்ல முடியாத வறுமையில் வாடிய இக்கவிஞர், செல்வம் பெற்றதும் ஏன் தமக்காக அப் பெருஞ்செல்வத்தைப் போற்றி வைத்துக் கொள்ளவில்லை? அதிலேதான் வாழ்வின் வெற்றி அமைந்து கிடக்கின்றது. மற்றவர் வாடத் தாம் மட்டும் வாழக் காணாத கவியுள்ளம், பெற்றதைக் கொண்டு தாம் மட்டும் வாழ எப்படி நினைக்க முடியும்? மேலும், குமணனைப் போன்று நாட்டில் பாடிவந்த புலவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள் இருக்கும்போது, பெருஞ்சித்திரனர் போன்ற கவிஞர் வாழ்வைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? எனவே, இக்காலத்துச் செல்வர்கள் தம் பணத்தை வங்கிகளில் (Banks) வைத்துவிட்டு, மனநிறைவு கொண்டு, வேண்டும்போது பெறும் அந்த நிலையிலேதான் அக்காலப் புலவர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. இந்த வங்கிகளில் பணம் போட்டால்தான் எடுக்க முடியும். அந்த அரச வங்கிகளோ, புலவர்களைப் பொறுத்தவரையில் என்றும் வற்றா வளம் சுரக்கும் நிதிகளாய் அமைந்திருந்தன. ஆகவே அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றியன்றித் தோல்வியைக் கண்டவர்களாக முடியுமா?

சங்கக்காலப் புலவர்கள் மட்டுமின்றி, இடைக்காலத்திலும் புலவர் பலர் அவ்வாறே பெற்றதைத் தங்களுக்கெனச் சேர்த்து வைக்காமல், மற்றவருக்கு வாரி வழங்கினர்கள் என்பதைக் காண்கின்றோம். இறைவனைப் பாடிய அடியவர்களுள் சுந்தரர் ஒருவர். அவர் காலத்தே பாடிய புலவருக்கு நாடும் நகரமும் செல்வமும் வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லை போலும்! எனவே, அவர் ஆண்டவனைப் பாடியே தமக்கு வேண்டியதைப் பெற்றதாக வரலாறும், அவர்தம் பாடல்களும் குறிக்கின்றன. அவர் ஒருமுறை பரமனைப் பாடிப் பெருநெற் பொதிகளைப் பரவையார் மனையில் கொண்டு வந்து சேர்த்தார்: அவர்தம்க. வா.—6