பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிகளைப் பார்க்கிறபோது எரிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. நீர்த்துப் போனவையாக இருக்கின்றன. எத்தனை தடவை அவள் ஒரு மயில் மாதிரி முன்னே வந்து தோன்றினாள்... குயில் மாதிரி பாடினாள் என்று சொல்ல முடியும்? மரபைக் கூட இரண்டு வகையாக்கிப் பார்க்கலாம். இலக்கிய மரபு, இலக்கண மரபு என்று. இலக்கிய மரபில் நமது தொல்கதைகளைச் சொல்லலாம். இது என்றைக்கும் அழிவதில்லை. நமது பழைய கதைகளில் இருக்கக் கூடிய மதுரை வீரனாகட்டும் துரியோதனனாகட்டும், அர்ச்சுனனாகட்டும் ... இந்தப் பாத்திரங்கள் எல்லாம் அழியாமல் சக்திமிக்கவையாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். ஆனால் கல்பொரு சிறுநுரைபோல என்று இப்போது அதே உவமையை அடிபிறழாமல் பயன் படுத்தினால் அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். பாரதியார் மகாபாரதத்திலிருந்து பாஞ்சாலியின் கதையை எடுத்துக்கொண்டு அதைப் புதிய காட்சியாக மாற்றி அதற்கொரு புது அர்த்தம் கொடுத்திருப்பதில் சக்திமிக்கதாக அமைந்துவிட்டது. மரபு என்கிறது நமக்குக்கிடைத்திருக்கிற ஒரு செல்வம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையிருக்கிறது. 'உன்னுடைய எலும்புகளில் உனது மரபைத் தேக்கிக்கொள்... ' என்பான் டி.எஸ். எலியட் ாலும்புகளில் உள்ள மரபை நமக்குப் பலமாக வைத்துக் கொள்ளவேண்டுமே தவிர, நமது பார்வையும் சிந்தனையும் நமது இரத்தம் போல சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். -