பக்கம்:கவிதை நூல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப்பாயிரம்

9


அவனுந்தான்,
தந்தைதா யுளமகிழக் கலைக்கழகத் தனையடைந்தே தகுதி விஞ்சச்
செந்தமிழும் ஆங்கிலமும் வடமொழியும் நனிபயின்று தேர்ந்து கண்ணாய்
வந்தவெண்னூல் பூதவிய லறிவியனூ லெனைப்பலவும் பயின்று தேறி
முந்துபல கலைநலந்தேர், முருகனெனப் புலமைநலம் முதிரப் பெற்றான்.

தண்ணளிசேர் நல்லுளமுந் தகைசான்ற பெருஞ்சால்புந் தழுவப் பெற்ற
கண்ணம்மை கைத்தலத்தே வளர்தருநாள் முதற்கொண்டே கருத்தி லென்றும்
பண்வளர்செந் தமிழ்ப்பண்பாம் தீஞ்சுவைப்பா லினைப்பருகி மகிழ்ந்தான், இந்நாள்
எண்வளர்பல் கலைகளெலாந் தமிழ்வழியே பரப்பவுளத் தெண்ணி னனால்.

கயவாகு போற்றவொளிர் கண்ணகியார் திருக்கோயில் கண்டு தாழ்ந்து
செயலாரும் புகழ்புரிந்த கண்ணம்மை மகவாகித் திகழுஞ் சீர்த்தி
இயல்பாகப் பெற்றதனால், சிலம்பின்முதற் பதிப்பாண்டிற் பிறத்த லாலீண்
டியலிசைநா டகப்பொருள்சேர் தொடர்நிலையி லிவனுள்ளம் இயைந்த தாலோ.

கருங்கடலிற் கலமுகைத்துக் காற்றினையே தொழில்கொள்ளுங் கருத்து முற்றி
விரும்பியநல் யவனம்வளர் கிரேத்தமுத லாகவெங்கும் மேவி முன்னாள்
ஒருங்குவளர் தமிழ்க்குலத்தார் உலகமெலாம் பரவியதோ ருயர்வு கேட்டும்
மருங்கறியார் அடிமைகளாய் மடிகின்ற தமிழர்நிலை கண்டு மாழ்கி,

சிந்துநதிக் கரையிலிந்நா ளகழ்ந்துகாண் மீனாட்டிற் நிகழ்ந்த முன்னோர்
சிந்தைமகிழ் செல்வவளத் திகழ்ந்தொளிரு நாகரிகச் சீர்த்தி பெற்றே
முந்துபல்லா யிரமாண்டின் முன்னரே புகழ்வளர்த்த முறைமை கண்டும்
செந்தமிழர் வாழும்வகை யறியாது தேம்புநிலை யகற்றல் தேர்ந்தே.

பண்டைமுறை யேயின்றுக் தமிழருயர் நிலைபெற்றுப் பாரில் வாழத்
தொண்டுசெயும் பெருங்காதல் உளத்தகத்தே கிளர்ந்தெழலால் தோற்றுந் திண்மை
கொண்டுலகிற் றுன்பகற்றுந் துறவறமேற் கொண்டுழைக்குங் குறிக்கோள் மேவித்
தண்டமிழர் போற்றுமயில் வாகனனார் துறவறத்திற் சார்ந்தா ரென்றே.

திருவளரு மயோத்திநகர் வந்தஅருந் திறல்திகழும் ஆயர் பாடி
மருவிவளர் கண்ணனெனு மிருவருமோ ருருவாகி வங்க நாட்டிற்
பெருகுபுகழ் காமார்பு கூர்தனிலே பிறந்தருளும் பெரியோன் செய்ய
திருவடியிற் பணிபுரியுஞ் சிவானந்த முனிவனடி சென்னி சேர்த்தி,

அப்பெரியோ னருண்மொழியைச் செவிமடுத்தே யருளறஞ்சே ரன்பி னாலே
மெய்ப்பொருளை யுணர்ந்துமகிழ் தவநிலையிற் றலைப்படுநன் மாண்பின் மேவி
இப்பெரிய வுலகத்தே யெவ்வுயிர்க்குந் துன்பகற்றி யின்ப நல்கும்
ஒப்பரிய புலமைவிபு லாநந்த அடிகளென ஒளிர்கின் றானால்.

  • Crete
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/5&oldid=1433240" இலிருந்து மீள்விக்கப்பட்டது