பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-6 娜 கவிதை விளக்கம் 'கவிதைக்கு எவ்வாறு விளக்கம் தருவது?’ என்று வினா கற்பித்தல் தொழிலில் புகும் நிலையிலுள்ள இளம் ஆசிரியர்களி டையே எழுதல் இயற்கை. இந்த நூலாசிரியரைப் பொறுத்த வரை கவிதைக்கு விளக்கம் தருவதற்கு எவ்வித திட்டமான முறையொன்றும் இல்லை. பேராசிரியர் அலெக்ஸாண்டர் ஹேடோ வின் கருத்துப்படி கவிதை கற்பித்தல்-கவிதைக்கு விளக்கம் தருதல்-காதல் புரிதலை ஒத்தது. காதல் புரிவதில் முறை யொன்று இருக்க முடியுமா? என்ற வினாவிற்கு என்னவிடையோ அதைத்தான் கவிதைக்கு விளக்கம் தருவதற்கும் வைத்துக் கொள்ளவேண்டும்! விளக்கந் தருவதில் ஒவ்வொருவரும் தத் தமக்குத் தோன்றுகின்ற முறையில்தான் விளக்கந் தருதல் வேண்டும். என்றாலும், ஒரு சில குறிப்புகளை ஈண்டு எடுத்துக் காட்டலாம். ஆனால் குறிப்புகளைக் கையாளும்பொழுது கற்பிக் கும் வகுப்பு, கற்பிக்க வேண்டிய பாடல் ஆகியவற்றிற்கேற்ற வாறும், கற்பிக்கும் ஆசிரியரின் அறிவுநிலை, மனப்பான்மை ஆகியவற்றிற்கேற்றவாறும் மாறுபடத்தான் செய்யும். முதல் நிலை: கவிதையை அதற்கு ஏற்ற இசையுடன் சொற் களைப் பிரிக்காமல் சீர் பிரித்துப் படித்துக் காட்டவேண்டும், பாட்டின் பொதுக்கருத்தை மாணாக்கர்கள் உணரும்வரை பல முறை ஆசிரியர் படித்துக் காட்டலாம். மாணாக்கர்கள் பாடலின் கருத்தை உய்த்துணர்வதுடன் கவிதை இன்பத்தையும் சொல் நயம், பொருள் நயம் ஆகியவற்றையும் துய்க்க வேண்டும். எக் காரணத்தைக்கொண்டும் கவிதையைப்பற்றித் தமது கருத்தை மாணாக்கர்களின் மனத்தில் வலிந்து திணித்தல் கூடாது. கவிதை யைப்பற்றி அவர்கள் சிந்தையில் ஒரு கருத்து உருவாவதற்கு வேண்டிய காலம் தருதல் இன்றியமையாதது. ஒவ்வொரு மாணாக்கனும் தத்தம் மனப்பான்மைக்கேற்றவாறு கவிதை யைப்பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமையை ஆசிரியர் பறித்தல் கூடாது. ஆசிரியர் புரியும் உதவியெல்லாம் மாணாக்கர்கள் கொண்ட கருத்தை வளர்ப்பதற்கும் உறுதிப் 1. பேராசிரியர் அலெக்ஸாண்டர் ஹேடா-Professor Alexander Haddow