பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

மதிலைக் குத்துவதினின்றும் அடங்கமாட்டா. இவரது போர் வீரரும் போர் என்றதும் மகிழ்ச்சியில் பொங்குபவர் ஆவர். இவ்வாறான படைப் பலம் பெற்ற மன்னர் இவர் ஆயின், வடபுலத்து மன்னர் வாட்ட முறுதற்குக் கேட்கவா வேண்டும்? அவர்கள் தம் உள்ளத்தில் துன்பம் மிக்கு உறங்காத கண்ணுடையவராயினர்.

இவர் பாண்டிய நாட்டில் உள்ள ஏழ் அரண்களை வென்றவர். வென்றதற்கு அறிகுறியாகத் தம் புலிப் பொறியினைப் பொறித்தவர். ஏழ் அரண்களைக் கோவூர்கிழார் ஏழ் எயிற் கதவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழ் எயில் கதவமாவது ஏழு மதிலின் கண் உள்ள கதவுகள் என்பதாம். பாண்டிய நாட்டில் ஏழு பொன் கோட்டை என்ற ஓர் ஊர் உளதாகவும், அது சிவகங்கையைச் சார்ந்ததாகவும், அதுவே இவ்வேழ் எயில் இருந்த இடமாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இவர் வீரமும் ஈரமும் ஒருங்கே அமையப் பெற்றவர். மென்மை மகளிர்க்கு வணங்குபவர்; வன்மையான வீரரைப் பற்றும் பேர்வலி படைத்தவர். பாணர்களையோ, பரிசில் மாக்களையோ இவர் காண நேரில், அவர்கட்கு அவர்கள் வேட்கை தீர அளிப்பவர். அவர்கள் இவர் பால் பெற்ற பொருள் மிகுதியினால் பிறர்பால் சென்று கேட்கவும் விரும்பார் என்றால், இவரது அள்ளி ஈயும் அளவைக் கூறவும்