பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இவ்வாறு புலவர்களால் இரக்கத்துடன் பாடப்பட்ட சோழர் கிள்ளிவளவர் குள முற்றம் என்னும் ஊரின்கண் விண்ணுடு புக்கனர். இதனால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப்பட்டார். துஞ்சிய' என் ஆணும் மொழி இறந்த என்னும் பொருளில் ஈண்டு ஆளப்பட்டுள்ளது.