பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


9. அண்டர் மகன் குறுவழுதி

தெய்வத்திரு மறையாம் திருக்குறளில் பொருட்பாலைச் சார்ந்த ஒழியியல் என்னும் பகுதியின்கீழ், குடிமை என்னும் அதிகாரம் காணப்படுகின்றது. அவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறளாகிய,

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

என்ற இதற்கு உரைவகுத்த பரிமேலழகர் அழகர், ' தொன்று தொட்டு வருகிற குடியில் பிறந்தவர் கொடுக்கும் பொருள் முன்னைய நிலையி ஆணும் சுருங்கிய போதும், தம் நற்குணத்தினின்றும் நீங்கார் என்று உரை கூறித் தொன்று தொட்டு வருதலாவது சேர சோழ பாண்டியர் என்பது போல ஆதிகாலம் தொடங்கி மேம்பட்டு வருதல் ' என்று விளங்கச் செய்துள்ளார். இதனால், தொன்று தொட்ட பழங்குடி முடிவுடை மூவேந்தர் குடிகளாகிய சேர சோழ பாண்டியர் குடிகள் என்பது நன்கு தெரிய வருகிறது. பாண்டியர்கள் பல சொற்களால் குறிக்கப்படுவர். மாறர், கெளரியர், செழியர், வழுதியர் என்பன அக்குடியினரைக் குறிப்பிடும் சொற்களாகும்.

இத்தகைய பாண்டியர் குலத்தைச் சார்ந்த ஒரு பாண்டியன் தன் விருப்பம் காரணமாகத் தன் அரச குலமாகிய மன்னர் குலத்தில் பெண் கொள்ளாது, ஆயர் குலத்தில் அதாவது இடை