பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


நெய் பெய்த சோற்றை உடம்பில்படச் சிதறியும் இன்புறுத்தும் மக்களைப் பெற்று வாழ்தலே செல்வத்தின் சிறப்பு என்றும் பலரோடு உண்ணும் களிப்பிற்கும் சிறப்பு என்றும் கருதினர். இத்தகைய மக்கட் பேற்றைப் பெருதவர்கட்குத் தாம் உயிர் வாழும் நாளில் பயனுகிய முடிக்கப்படும் பொருள் இல்லை என்றே கூறி விடுகின்றார். மக்கள் செய்யும் அட்டகாசத்தினை எவ்வளவு அழகாகத் தம் செய்யுளில் சித்திரித்துள்ளார் பாருங்கள் !

"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கல்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறும் மக்கள்"

என்பது அச்சொல் சித்திரம்.