பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கல்லாடனார் என்னும் புலவர் இவரது தலையாலங்கானத்துச் செருவென்ற செய்தி யினைக் குறிப்பிட்டுள்ளார்.

மாங்குடி மருதனார் இவர் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற சிறப்பையும், இவர் மறக்கள வேள்வி அறக்கள வேள்வி செய்த சிறப்பினையும், இம்மன்னரால் தோல்வியுற்ற பகை மன்னர் வீரசுவர்க்கம் புகுந்து பேறு பெற்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் இம்மன்னரது குணப்பண்பினை அழகுறப் புலப்படுத்தியுள்ளார். இவ்வரசப் பெருமகனார், “தம்மீது வெகுண்டுவரும் வீரரைக் கண்டு மதித்ததோ, அன்றி அவமதித்ததோ இலர். பகைவரைப் பற்றிக் கொன்றதற்காக மகிழ்ந்ததோ அன்றி இங்ஙனம் எல்லாம் செய்தோமே என்று தம்மை மிகுத்து எண்ணியதோ இல்லை” என்பன இப்புலவர் மகிழ்ந்து கூறும் கருத்துக்கள். இம் மன்னர்பிரானுடைய மாண்புகளைப் பரக்கக் காணவேண்டுமானால் மாங்குடி மருதனார் பாடியுள்ள மதுரைக்காஞ்சி என்னும் தனி நூலிலிருந்தும் நக்கீரர் பாடியுள்ள நெடுநெல்வாடை என்னும் நூலின் மூலமும் அறியலாம்.

மாங்குடி மருதனார் தம் மதுரைக்காஞ்சியில், இம்மன்னர் தம் பகை மன்னர்மீது படை எடுத்துச் சென்றதையும் அம் மன்னர்களின்