བཟིགས་མ། 363ཡོ}༤ கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு 3. முருகா முருகா! முருகா! வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் நிறமும் தனமும் கனமும்" (முருகா) 4. கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதி ஐயா! படரும் வானொளி இன்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள், உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே ஒவ்வொரு துண்டுளி யும்வழி யாகச் சுடரும் நின்றன் வடிவையும் கொண்டே சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே" 5. வெட்டி யடிக்குது மின்னல் - கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்; கூ கூவென்று விண்ணைக் குடையது காற்று: சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும இடிய - மழை எங்ங்ணம் வந்ததடா, தம்பி வீரா: ' இந்தப் பாடல்கள் முழங்கப்படுவதையும் கேட்கின்றான் நாட்டுப்புறத்தான். இதனை நினைவில் கொண்டு, குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே,அடா - மயில் குதித்துக் குதித்துநடம் ஆடுமே.அடா - மலர் வெயிலும் மழையுமதில் தோன்றுமே.அடா - மலர் விரிந்து விரிந்துமணம் வீசுமே, அடா! (4) என்ற பாடலில் வெளியிடுகின்றான், தன் உணர்ச்சியை. 10. மேலது. முருகன்பாட்டு 11. தோ.பா. ஞாயிறு வணக்கம் - 1 12. பா.க: தனிப்பாடல்கள் - ഥങ്ങു-2
பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/104
தோற்றம்